கார்த்திகை தீபம் பத்து நாளும்

கீழ்வரும் பாடலை அன்புடன் மித்திரன் திறம்பட எழுதியுள்ளார்


காரிருள்நிறை நெஞ்சகத்தே காட்சியுந் தெளியாஆ
கார்மேகம்மறை சுடரோனவன் போலுன்மதி மழுங்கியே
போரிருள்கறை படிந்த மாந்தருள்ளம் தூய்மையுறவே
கார்த்திகை தீபமொளி வீசட்டும் எட்டுத்திக்கும.

(இருப்பினும் அதில் சற்று யாப்பினை சேர்த்து எழுதியுள்ளேன்)


சந்தக் கலிவிருத்தம்

தேமாங்கனி. புளிமாங்கனி புளிமாங்கனி தேமா

பார்சூழிருள் உளமெத்தனை அதன்காட்சியுங் காட்டா
கார்மேகமும் மறைக்குஞ்சுடர் மதிமங்கிடு தன்மை
போர்மாந்தரின் மனமுங்கறை புகும்கும்மிருட் டாமே
பார்கார்த்திகை ஒளித்தீபமும் பரவட்டுமென் திக்கே. (ராஜன் பழனி)



அடிதோரும் எதுகை. "" ர். ""
முதலடியில். பா..... அ. மோனை
இரண்டாமடியில். கா.....ம... மோனை
மூன்றாமடியில். போ....பு ....மோனை
நான்காமடியில் பா.... ப... மோனை

எகாரத்தில் முடிவது சிறப்பு


பார் =உலகம்
மதிமங்கிடு = சந்திரன் ஒளி மங்கிடும்
மென் திக்கே. = எட்டுத் திசை

எழுதியவர் : பழனி ராஜன் (7-Dec-22, 10:23 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 17

மேலே