வாததேகிகட்கு ரசம் - நேரிசை வெண்பா

(’மை’ ம மோனை, ‘ய்’ இடையின ஆசு)
நேரிசை வெண்பா

சக்கர வர்த்திவெள்ளைச் சாரடைபா கல்முருங்கை
தொக்கிலிளந் தண்டுநறுந் தூதுணம்வார் - மைக்குழலே
சீதமுறு காணியிவை செந்தளிர்க ளிற்றினமும்
வாததே கர்க்கிரசம் வை

- பதார்த்த குண சிந்தாமணி

சக்கரவர்த்திக் கீரை வெள்ளைச் சாரடை, பாகல், முருங்கை, முளைக்கீரை, நல்லதூகளம், பொன்னாங் காணி இவ்விலைகளை தினமும் ரசம் செய்து வாத உடலினர்க்குக் கொடுக்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 7:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே