என் பங்குக்கு ஆகாசம்பட்டு பாணி வெண்பாக்கள் 2
நேரிசை வெண்பா
பங்காளிக் கெல்லாமே பல்லில் வெஷமுன்னா
ஒங்காளுக்(கு) அப்பப்பா பார்வையில்..! - இங்கவாடா
கோபாலு! மூத்தவரு கோச்சிக் கிணாராமே
போபாலு வாயுவைப் போல்! 3
கண்ணாடி கூட ஒடசல்தான்; ஒங்களின்
முன்னாடி வைக்கவும் கூச்சந்தான்! - இந்த
விவஸ்தைகெட்ட வாழ்வில் விருந்தாடி முன்பும்
அவஸ்தைப் படலோ அழகு? 4
- ஆசிரியர் ஆகாசம்பட்டு சேஷாசலம்
நேரிசை வெண்பா
கஞ்சியும் கூழும் குடிக்கவும் ஆசைதான்
மிஞ்சியே போயிட்ட மீந்தகறி - பஞ்சிபோல
ஆனாலும் ஏழைக்கே ஆக்கமான வேறவழி
தோனாம போச்சேசா மி! - வ.க.கன்னியப்பன் (ஆகாசம்பட்டு பாணி வெண்பா)
நேரிசை வெண்பா
சோத்திலே கையவச்சா சொக்குதடி எம்மனசு
ஆத்தாவும் வைச்சுதந்த ஆனந்தம் - தோத்துதடி;
நேத்துவந்த நீசெஞ்ச நெத்திலி மீன்கொழம்(பு)
ஆத்தாடி என்னகிறுக்(கு) ஆச்சு. - வ.க.கன்னியப்பன் (ஆகாசம்பட்டு பாணி வெண்பா)