கல்வியொடு கண்ணோட்டம் கூடிநின்றால் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செல்வம் பெருகிடச் சிந்தை மயங்குவர்க்குக்
கல்வியொ(டு) ஆன்றதொரு கண்ணோட்டம் – நல்வினையால்
கூடிநின்றால் பெற்றிடுவர் கூற்றம் வருமுன்னே
வாடினோர் வாழ்வில் வளம்.

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-22, 9:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே