இமைகள் இமைக்க மறந்தேன் உன்னால் 555
***இமைகள் இமைக்க மறந்தேன் உன்னால் 555 ***
உயிரானவளே...
நாம் சேர்ந்து நடக்கையில்
நம்மோடு பேசிவந்த...
உன் கொலுசொலி சப்தம்
செவியினில் நித்தம் கேட்கிறது...
உன் கோவை இதழ்கள்
கண்களில் வந்து செல்கிறது...
மையம் கொண்ட மழைமேகம்
உன் கூந்தலில் இறங்கியதோ...
உன் விழிகளில் தோகைவிரித்தாடும்
வண்ண மயில் பார்க்கிறேன்...
மழையில் மலர்ந்த
மல்லிகையாய் உன் பற்கள்...
பழுத்த மாம்பழம் போல்
உன் கன்னங்கள்...
கத்திபோன்ற
இரு புருவ மத்தியில்...
ஒன்றன்மேல் ஒன்றாக
வண்ண பொட்டுக்கள்...
உனது கண்களை
கண்டேன் என்னை இழந்தேன்...
இமைகள் இமைக்க
மறந்தேன் உன்னால்...
மௌன
மொழிகளை கற்று கொண்டேன்...
உன் நினைவுகளோடு
பேசி பழகுவதால்...
பௌர்ணமி வெளிச்சத்தில்
தேடி அலைகிறேன்..
உன் பூ முகத்திற்கு போட்டியாக
வெண்ணிலாவா என்று.....
***முதல்பூ.பெ.மணி.....***