மௌனம்
விழிகள் வழியே
நீயும் நானும்
பேசும் மொழி
உதடுகள் உதறி
உனக்கும் எனக்கும் பொருள்
உணர்த்தும் மொழி
பூவுலக மொழிகளுக்கெல்லாம்
பொதுவான மொழி
சாதி மதம் இனம்
நாடு என அனைத்தையும்
கடந்து நிற்கும் மொழி
ஆணா பெண்ணா
நீயா நானா என
வாய்ச்சண்டை யிட்டாலும்
ஒற்றுமையை வலியுறுத்தும்
ஒரே மொழி
இல்லறத்திலும் துறவறத்திலும்
இன்பத்தை தந்து
இறுதியாக வெற்றி தரும்
ஒரே மொழி..
மௌன மொழியே.....