கனவு

ஆழ்ந்த தூக்கத்தில் மட்டும்
வருவதில்லை கனவு

விழித்திருக்கும் போது நமது
மனக் கண்ணில் தோன்றி
மறைவதும் கனவே...

கனவை இலட்சியமாக்கி
நனவாக்க முயற்சித்தால்
தோல்விகளே மிஞ்சும்

மிஞ்சிய தோல்விகளை முறியடித்து
எஞ்சி நிற்கும் வெற்றியை தேடினால்
புழுக்கள் போன்ற சில மனிதர்கள் தடைக்கல்லாய்


தடைக்கல்லை உடைத்தெறிந்து
தடுக்கி விழும்போதெல்லாம்
தயக்கம் எட்டிப் பார்த்து சிரிக்கிறது.

சிரிப்பை அலட்சியமாக்கி
சிந்தனை நோக்கியே
சிரத்தையுடன் மேற்கொண்ட
முயற்சிகளுக்கு கிடைத்த
அங்கீகாரமே வெற்றி

எழுதியவர் : இராசு (11-Dec-22, 4:06 pm)
சேர்த்தது : இராசு
Tanglish : kanavu
பார்வை : 148

மேலே