கதவினைத் திறவாயா
கதவினைத்திறவாயா
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷=÷=
தயங்கித் தயங்கித்
தட்டாமலேயே நிற்கிறேன்
நெடுநேரமாய் ! -நின்
கோயிற்கதவுகளோ
வாயிற்கதவுகளோ
திறக்கப்படாமலேயே
இறுகிக் கிடக்கின்றன !
தட்டுவேன் திடமாக
திறக்கும்வரை
இன்றேல்
முட்டி மோதி
உடைத்துத் திறப்பேன் - உன்
உள்ளக் கதவுகளை !
தட்டுங்கள் முட்டுங்கள்
தள்ளுங்கள் வெல்லுங்கள் .
கதவுகள் யாவும்
திறந்திடும்
கனவுகள் யாவும்
நடந்திடும் !!
- யாதுமறியான்.