காதலிக்கு ஓர் எழுதாக் கடிதம்

காதலிக்கு ஓர் எழுதாக் கடிதம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ


தாய்ச் சொல் கேட்டு ,
தந்தை சொல் போற்றி

வீண் சொல் துறந்து
வாய்ச்சொல் புரந்த
வழக்கமோ இல்லை !

கேளாச் செவியனாய்
மீளாக் குழப்பத்தில்

மூழ்கிடும் வேளையில்
கேட்கவே துடிக்கிறேன்.

இதயத்தைப் பிளந்து
என் குரல்நாண் கிழித்தெழும்

பக்தியின் கூட்டொலி
பாசத்தின் பேரொலி

நெடுநாள் மோனத்தில்
நித்தியத் தவம்செய்

நின் நீள்செவி மோதியே
செவிப்பறைத் தாக்காது

எதிரொலி போலவே
திரும்புமோ திசையெலாம் !!

கேளா ஒலிகளாய்
வீணாகிப் போகாது

நின் மீளா பார்வை
என் நெஞ்செலாம்
நிறையும்வரை

ஓயாது கேட்பேன்;
தந்துவிடேன் கேட்பதெலாம்!!


-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (12-Dec-22, 7:06 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 125

மேலே