என் உடலுக்குள் உயிராய் இருப்பது நீதான் 555
![](https://eluthu.com/images/loading.gif)
***என் உடலுக்குள் உயிராய் இருப்பது நீதான் 555 ***
ப்ரியமானவளே...
நித்தம் நித்தம்
உன்னை சுமக்கிறேன்...
நீ என்னை
மறந்து சென்றபோதும்...
நீ இல்லாத பிரிவு
எனக்கு வலித்தாலும்...
உன்னை சுமந்து திரிவதையே
வரமென கேட்கிறேன்...
என் வெறும் உடலுக்கு
உயிராய் இருப்பது நீதான்...
ஈரமாய் கண்கள் கசிந்துகொண்டு
உன்னை நினைவு படுத்துகிறது...
குளத்தில் நீச்சல்
பயின்றவன் நான்...
உன் கரம் கோர்த்து தான்
காதல் கடலில் குதித்தேன்...
என்னோடு
நீயும் நீந்துவாய் என்று...
நீ பாதம் மட்டும் நனைப்பாய்
என்று தெரியவில்லை எனக்கு...
எதை மறக்க நினைத்தாலும்
ஆறாத வடுவாய் எனக்குள்...
உன்னை நினைவு
படுத்திக்கொண்டே இருக்கிறது...
நேற்றைய மழையில்
பூமியெங்கும் ஈரம்...
உன்னை பிரிந்த நாள்முதல்
என் விழிகளுக்குள் ஈரம்.....
***முதல்பூ.பெ.மணி.....***