பட்டும் படாமல்
அங்கதமாயிருந்த
அந்தஸ்து இடைவெளி
அடைக்கப்பட்டு
பட்டியலிடப்பட்ட
சில பல குறைகளும்
களையப்பட்டு
வறண்டுகிடந்த
வாழ்க்கை
தரமுயர்த்தப்பட்டு
கொள்வாரில்லையென
அறிவுரைகள்
ஆஃப் செய்யப்பட்டு
இன்னும் பல
பட்டுகளுக்குப் பிறகும்
பட்டும் படாமலே
இருந்துகொண்டிருக்கிறது
பிடிக்கொழுக்கட்டையாய்
பிறந்தகத்தில்
அவள் பிடிவாதம்!