சிந்தை வெளியில் சிறகடிக்கும் உன்நினைவு

நந்தவனப் பூக்கள் அனைத்தும் நடனமாட
அந்திவான நீலத்தில் ஆனந்த வெண்ணிலவு
சிந்தை வெளியில் சிறகடிக்கும் உன்நினைவு
சிந்துது செந்தமிழ்த்தே னை !

நந்தவனப் பூக்கள் அனைத்தும் நடனமாட
சிந்தை வெளியில் சிறகடிக்கும் உன்நினைவு
சிந்துது சிந்தியல்தே னை !

-----இரு வடிவில் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (13-Dec-22, 11:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே