கோரிக்கைக்குப் பாட்டு -- 2
நன்று; திரு.சக்கரை வாசனாரின் நல்ல முயற்சி; மூன்று இடங்களில் வெண்டளை அமையவில்லை.
எனவே 1, 3 சீர்களில் பொழிப்பு மோனை வருமாறு,
நேரிசை வெண்பா
உந்துகின்ற காதலதை ஓங்கும் எழுத்தினில்
மந்தையின் ஆடுகளாய் மாந்தியே - வந்தவர்
சந்து வழியொதுங்கிச் சாற்றுகின்ற பா,குறைய
கந்தனவன் சோதரனே காப்பு!