கவிதை அழகில் விழிகள் அசைய
கவின்நீல வானம் எழிலில் விரிந்திருக்க
தெவிட்டாத தேன்மலர்கள் பூத்துச் சிரித்திருக்க
கவிதை அழகில் கண்கள் அசைந்திருக்க
சுவைத்தமி ழுக்குத் தோட்டத்தில் கொண்டாட்டம்
கவின்நீல வானம் எழிலில் விரிய
தெவிட்டாத தேன்மலர்கள் பூத்துச் சிரிக்க
கவிதை அழகில் விழிகள் அசைய
சுவைத்தமிழ் கொண்டாடு தே
கவின்நீல வானம் எழிலில் விரிந்திருக்க அங்கே
தெவிட்டாத தேன்மலர்கள் பூத்துச் சிரித்திருக்க அப்போது
கவிதை அழகில் கண்கள் அசைந்திட நீவர
சுவைத்தமி ழுக்குத் தோட்டத்தில் கொண்டாட்டம் சுந்தரியே
கவின்நீல வானம் எழிலில் விரிந்திருக்க அங்கே
தெவிட்டாத தேன்மலர்கள் பூத்துச் சிரித்திருக்க அப்போது
கவிதை அழகில் கண்கள் அசைந்திட நீவர
சுவைத்தமி ழுக்குத் தோட்டத்தில் கொண்டாட்டம் சுந்தரியே
கவின்நீல வானம் எழிலில் விரிந்திருக்க அங்கே எப்போதும்
தெவிட்டாத தேன்மலர்கள் பூத்துச் சிரித்திருக்க அப்போது தேன்தமிழ்க்
கவிதை அழகில் கண்கள் அசைந்திட புன்னகையில் நீவர
சுவைத்தமி ழுக்குத் தோட்டத்தில் கொண்டாட்டம் பாராடி சுந்தரியே