கைப்பேசி காதல்
கைப்பேசி காதல்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கைப்பேசி திரைகளில்
காலம் ஓடுது !
தொலைதூரக் கனவுகளைக்
கண்முன்னே காட்டுது !
சின்னஞ்சிறு பார்வையும்
புன்னகையின் புதையலே!
ஒருவரிக் குறுஞ்செய்தி
பெருமகிழ்வின் அருவியே !
தொடுவானம் அருகினிலே
நிற்கும் நின்றன்
துடிக்காத இதயம்-
மேலனுப்பும்
செய்தியெலாம்
அடிவான விடியலின்
ஆரவாரச் சிவப்பாய்
என்
நான்கறை நெஞ்சகத்தை
நிறைக்குமே !- அது
நாளங்களிலெல்லாம்
மகிழ்ச்சியாய்
மறுரூபமாகி
ஒற்றைச் செல்வரை
ஓடிப் பரவிடுமே !
வார்த்தைகள் எழுத்துகளின் தொகுப்பல்ல
இதயங்களின் சிலிர்ப்பு !
-யாதுமறியான் .