515 வாய்பேசா விலங்கைக் கொல்வோன் வன்பேயாவன் - விலங்கினத்துக்கு இடர் செய்யாமை 2

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு

மானிடர் துயரைச் சொல்வர்
..மற்றுளோ ரதனைத் தீர்ப்பர்
ஆனவ ருறுநோய் நீக்க
..அனந்தமாம் பரிகா ரங்கள்
மோனமா யிடுக்கண் டாங்கி
..முறையிட வறியா தல்லல்
தானுறு விலங்கைக் கொல்வோன்
..தருமனோ பேயோ வம்மா. 2

- விலங்கினத்துக்கு இடர் செய்யாமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மக்கள் தாங்கள் படும் துன்பத்தை வாய்விட்டுச் சொல்லுவர். அதனைக் கேட்ட பிறரும் நண்பரும் அதனைத் தீர்ப்பர். அதனைத் தீர்க்கும் வழிகளும் பல. வாய் பேசவறியாத விலங்கினங்கள் தங்கள் துன்பத்தைத் தாங்களே தாங்கி வருத்தமுறுகின்றன. அவற்றைக் கொல்வோன், நன்மை கைக்கொள்ளும் அறவோனோ? தீமையே புரியும் பேயோ?

ஆனவர் - நண்பர். மோனம் - வாய் பேசாமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 3:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே