இன்று போய் நாளை வாராய் - திலங்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாகவும், டி.கே.பகவதி இராவணனாகவும் நடித்து 1958 ல் சம்பூர்ண ராமாயணம் என்ற திரைப்படம் வெளிவந்தது.
இதில் இராவணன் பாடுவதாக, கவிஞர் ஆத்மநாதன் எழுதி, K.V.மகாதேவன் இசையமைப்பில் இசைச்சித்தர் சிதம்பரம் S.ஜெயராமன் 'திலங்' ராகத்தில் பாடிய ’இன்று போய் நாளை வாராய்’ ஒரு அருமையான பாடலாகும்.
யு ட்யூபில் கேட்டும், பார்த்தும் மகிழலாம்.
இன்று போய் நாளை வாராய்
இன்று போய் நாளை வாராய்
என எனையொரு மனிதனும் புகலுவதோ
(இன்று போய்)
மண்மகள் முகங் கண்டேன்
மனம் கலங்கிடும் நிலையின்று
ஏன் கொடுத்தாய் ஈசா
மண்மகள் முகங் கண்டேன்
மனம் கலங்கிடும் நிலையின்று
ஏன் கொடுத்தாய்
இன்று போய் நாளை வாராய்
என எனையொரு மனிதனும் புகலுவதோ
எண்டிசை வென்றேனே
எண்டிசை வென்றேனே
அன்று இன்னிசை பொழிந்துனை கண்டேனே
மண்மகள் முகங் கண்டேன்
மனம் கலங்கிடும் நிலையின்று
ஏன் கொடுத்தாய்….