அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - திலங்
பட்டணத்தில் பூதம் (1967) திரைப்படத்தில் கண்ணதாசன் பாடலியற்றி, திரு.கோவர்த்தனம் இசையமைப்பில் ’ஜெய்சங்கர் - கே.ஆர்.விஜயா’வுக்காக T.M.சௌந்தரராசன் - P. சுசீலா திலங் (மிஸ்ர பீலு) ராகத்தில் பாடிய அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி பாடல் கேட்பதற்கும், காட்சிகளை ரசிப்பதற்கும் அருமையான பாடலாகும்.
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி (அந்த)
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
இல்லாமல் தோகை ஏதடி (அந்த)
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே – அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே – என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளைஎன் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை – என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி – இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – தோகை
இல்லாமல் வேலன் ஏதடி (அந்த)