பாசம்
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
அந்தக் கல்லூரியில் இருந்து வேகமாக வெளியே வந்தார் முத்தரசன். பின்னாடியே அவரது மனைவியும் பதட்டமாகவே வந்தார். காரிலிருந்த மதிவாணனுக்கு ஒன்னும் புரியல.
வண்டிய எடுப்பா வீட்டுக்கு போவோம் ன்னு சொன்ன முத்தரசன பார்த்து மனைவி பார்வதி இப்படி கேட்டாள். அவன் அப்படி என்ன தப்பா சொல்லிட்டான் ன்னு இப்படி கோவமா வாரிய?
கொஞ்ச நேரம் பதில் இல்லை. அப்புறம் சொன்னார்.
அவன் என்பேச்ச கேட்கலை. அது எனக்கு பிடிக்கல.
நீங்க தேவை இல்லாம கோபப் படுறீங்க. என்னவிட உங்களைத்தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அதைத்தானே சொன்னான் என்றாள் மனைவி.
மீண்டும் அமைதியானவர் மனைவியை ஏறிறங்கப் பார்த்தார்.
தம்பிக்கு பட்டமளிப்பு விழாவும், பாராட்டு விழாவும் ன்னு ரொம்ப மகிழ்ச்சியா தானே போனிங்க இப்போ என்னையா கோபமா இருக்கீங்க இது ஓட்டுநர் மதிவாணன் குரல்.
யாருக்கும் பதில் சொல்ற மாதிரி இல்ல.
சாயங்காலம் வீடு வந்தான் தமிழரசன். அம்மா வாஞ்சையோடு அணைத்து முத்தமிட்டாள். என் தங்கமே உன்னை பெத்த சந்தோசத்தை விட இப்போ ரொம்ப சந்தோசமா இருக்குது ராசா. இரு காப்பி கொண்டாரேன் ன்னு அடுப்படி பக்கம் சென்றாள்.
கண்கள் தந்தையைத் தேடின. ஆளைக் காணோம்.
அம்மா, அப்பாவை எங்கே காணோம். ரொம்ப கோவமா இருக்காரோ?
நான்தான் கோபப் படனும் தெரியுமா ம்மா. என்னோட ஆசிரியரும், நீதிபதி குமாரசாமி யும் என்ன பாராட்டி பேசும்போது உங்க ரெண்டு பேர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் வந்ததை நான் கவனிச்சேன்.
ஆனா நான் பேசும்போது அப்பா விருவிருன்னு கோபமா நடந்துட்டார். நீயும் கூடவே போயிட்ட. நான் என்ன தப்பா பேசிட்டம்மா.?
நீ சொன்னத தானே நான் சொன்னேன். கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது தமிழரசனுக்கு.
அழாதேடா தம்பி. அப்பா படிக்காதவரு. கொஞ்சம் முன்கோபி. உன்ன அவருக்கு ரொம்ப பிடிக்கும். உனக்காக, இந்த உலகத்துல என்ன வேணும்னாலும் வாங்கித் தர தயாரா இருக்காரு.
உன்கிட்ட நேற்று அப்பா சொன்னத நான் கதவோரம் நின்னு கேட்டுக்கிட்டு தான் இருந்தேன். அப்பாவுக்கு தெரியும் நீ அவர பெருமையா பேசுவேனு.
அதனாலதான் இன்றைக்கு மேடையில அம்மாவை பத்தி பெருமையா பேசுன்னு உன்கிட்ட சொன்னாரு.
அம்மாவோட பாசத்த நான் உனக்கு அப்பப்போ சொல்லி சொல்லித்தான் வளர்த்தேன். ஆனா அப்பாவோட பாசத்த அவரும் சொல்லல, நானும் உனக்கு சொல்லித் தரல.
அதனாலதான் நான் சொல்லிக்குடுத்த மாதிரி அப்பாவ பெருமையா நீ பேசின. அம்மாவ பெருமையா பேசலன்னு அவருக்கு உன் மேல கோபம். அவரு நம்ம ரெண்டு பேரு மேலயும் உயிரா இருக்காருப்பா .
அவரை சிறப்பிக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. அப்பாவோட கோபம் கொஞ்ச நேரம்தான். அப்புறம் எல்லாம் சரியாயிடும். நீ கண்ணீரை துடைச்சிக்கோ தம்பி. இந்தா காப்பி குடி. அப்பா இப்போ வந்துடுவாரு.
இதை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த முத்தரசன் கண்களில் இப்போ கண்ணீர் வெள்ளம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
💓 குடும்பத்தில் எல்லோரும் பாசமானவர்கள்தான் சமயம் வரும்போது, ஒவ்வொருவரும் சமமானவர்கள் தான் 💝
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓