என்ன வாழ்க்கை
என்ன வாழ்க்கை
வாழ்க்கையின் நிஜ சந்தோஷங்களை
அவை எட்டிவிடும் தூரத்தில் இருக்கும்போதே
பிடித்துவைத்து வாழ்ந்துகொள்ளுங்கள்
விட்டுவிட்டோமேயானால்
அவை எங்கோ எட்டமுடியாத தூரம் சென்றுவிட்டு
எங்கே என்னைப் பிடியேன் பார்க்கலாம்
என்பதைப்போல பார்த்து
எக்காளமிட்டு கைக்கொட்டி சிரிக்கும்
நல்லது செய்யணும்னா
செஞ்சிட்டு போய்க்கிட்டே இருக்கணும்
அதனால் பலன் பெறுகிறவர்கள்
நம்மைப் பார்க்கிறார்களா என
திரும்பிப் பார்த்தோமேயானால்
நாம் தரம் தாழ்ந்திருப்போம்
Bad Habits ன்னு பெருசா ஏதும் இல்ல ..
பட் Bad Boy.. Crush...Play Boy.. Chocolate Boy list ல இருக்கிறது
ஒரு பெருமை ஒரு கெத்துன்னு
இருந்த காலம். பிழைகள் சூழ் காலம்.
சிலருக்கு பிடித்தது ..
சிலருக்கு பிடிக்காமல் போனது,
சிலருக்கு பிடித்தும் பிடிக்காமல் போனது ,
பலரிடம் சென்று அவன் பொறிக்கி என்றது ,
அவன் நல்லவன் என்றது
இதுபோல் எல்லா அடைப்புகளுக்குள்ளும் உட்பட்டிருந்தேன் ..
எந்த அளவுக்கு Bad/Play/Chocolate boy ஆக இருந்தேனோ .. அந்த அளவுக்கு genuine ஆகவும் இருந்தேன்
சிலருக்கு அண்ணனாக
சிலருக்கு தம்பியாக தாயாக இப்படி இப்படி ..
யாருக்கு எப்படி வேண்டுமோ அப்படி ..
அப்போதும்
உள்ளுக்குள் ஒரு ஆழ்ந்த பிரார்த்தனை இருக்கும்
என்னால் யாருக்கும் உயிர்சேதமோ
வாழ்க்கையில் பாதிப்போ
நேரவேக் கூடாது என்பதில் not planned but prayer கருதல் இருக்கும் ..
நான் கட்டாயம் என்னை மாறியே ஆகவேண்டிய நிலை என்னை பின்தொடர்ந்தபடியே இருந்தது
சாமியண்ணன் ன்னு ஒருத்தர்
எங்க ஏரியாவில் எல்லாருடைய வீட்டுக்கு வந்து குறை விசாரிச்சு நிவர்த்தி செய்துக் கொடுப்பார் .. சின்ன சிம்பிள் விஷயம் முதல் பெரிய வேலை வரை ..
எவ்ளோ ணா வேணும்னு கேட்டால்
ஏதோ குடுங்க ன்னு வாங்கிட்டுப் போவார்
கடனும் அவருக்கு அதிகம்
கல்யாண வயதில் பெண்ணும் இருக்கிறாள்
வேலைக்கு போகிறாள்
கடன் கழுத்து நெரிச்சப்போ கூட யாருகிட்டயும் உதவிக்கு நிக்கல
மனசு தாங்கலை
நம்ம கெட்டுபோயிட்டோம்தான் ஆனா நல்லவங்களை நல்லவங்க ன்னு சபையில் சொல்லித்தானே ஆகணும்
அந்த மனிஷனை கூப்பிட்டு என்னால் உதவ முடியுமான்னு பேசிப் பார்த்தேன்..
நீங்க இவ்ளோ நல்லது பன்றீஙக
உங்களுக்கு நாங்க உதவி செய்றதுல
என்ன தப்பிருக்கு ன்னு கேட்டேன்
அதுக்கு அவர் ஒரு வார்த்தை சொன்னார்
""உங்களை மாதிரி என்னாலே நினைக்க முடியாது தம்பி .. நாம இவ்ளோ உதவி செய்றோமே இவஙக ஏன் நமக்கு கைமாறு செய்யக்கூடாது ன்னு .. என்னாலே நினைக்க முடியாது தம்பி .. என் கடன் என் கர்மா .. என்னால் செய்யப்படும் நல்லவைகள் எனக்கு ஆத்மதிருப்த்தி..
இல்லேன்னா எனக்கிருக்கும் நெருக்கடிக்கு எப்பவோ என் வாழ்க்கையை முடிச்சிருப்பேன்னு சொன்னார் அந்த மனுஷன் ""
மனசு ரொம்ப வேதனைப் பட்டுடுச்சு
மெது மெதுவா மாற ஆரம்பிச்சேன்.
எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க
அற்பவாழ்க்கை
அற்பப்பிறவி நாம்
வேண்டியவங்க வேண்டாதவங்க ன்னு
ஏதும் இல்லைங்க
கெத்து கௌரவம் எல்லாம்
நல்ல மனிதர்களுடைய மனங்களுக்கு முன்னால்
தவிடுபொடிதான்
சாதாரணம் என்பது அழகு
எத்தனை எத்தனை காதலுக்காகவேனும்
நாம உயிரைக் கொடுன்னா
கொடுத்திடுவோமா ?
ஆனா மனைவி பிள்ளைகள்
இவங்களுக்கு ஒண்ணு ன்னா
உயிரைக் கொடுத்திடுவோம்தானே
நம்ம அப்பா இருக்காரு
எந்த பிரச்சனைன்னாலும் நம்மளை
பாதுகாப்பார் என்று
பிள்ளைகளும்
தோள் சாய்ந்து பிடித்தத்தைப் பேசிக்கொள்ளவும் ,
நாம் இல்லாவிட்டாலும்
நகரும் காலங்களின் காலாவதியை ,
கண்ணீரின் கறைகளில்
கணக்கிட்டுக் கொண்டு
படுக்கைப்புரண்டு
நெடிய கழியும் அவளின் இருள்
எத்தனை தைரியசாலிகளாக இருந்தாலும்
மேற்கத்திய போக்கில் வாழ்ந்திடினும்
நம்மை சார் இரத்த பந்தத்திற்கு
பாதிப்பென்றால்
Take it easy என கடந்துவிடமுடியுமா ?
நம்மைப் பெரிதெனக் கருதிக்கொண்டு நாம் செய்யும்
எதுவும் பெரியதாகிவிடாது
சிறு சிறு பூரிப்புகளுக்கெல்லாம்
தலை/செவி சாய்த்துக் கொடுத்து
எதுவுமே தெரியாதென்பதில்
தோற்றுக் கொடுப்பதில்
எல்லாக் கடினங்களும் Take it easy
என போய்விடும்
பத்துப்பேர் சூழ நின்னு பேசும்போது தைரியமாக
எதிர்க்கொள்ளும் மனம்
நம் குடும்பத்திற்கு ஒரு ஆபத்து சூழ்ந்தால்
பயப்படுகிறது
அடித்தால் வலிக்கும் என்பதே அறிய உண்மை
இப்படியெல்லாம்
வாழ்ந்தும் இறந்தும் அவர்
நிறைய சொல்லிக்கொடுத்துப் போனார்
நாம்
பிரச்சனைகளுக்குள்ளயே உழன்றுக் கொண்டிருந்தால்
அப்பிரச்சனைகள் நம்மை ஏதும் செய்யாது
நாம எப்போ அந்த பிரச்சனைகளிலிருந்து
வெளி வர நினைக்கிறோமோ
அப்போதிருந்து அந்த பிரச்சனைகள்
பூதாகரமாய் நம்மை பின் தொடரும்
நிம்மதி இழப்போம்
உறக்கம் இழப்போம்
நடு இரவில் யாரோ நம்மைத் தொடர்வதைப் போல மனம் கருக் கென்று இருக்கும்
ஆனாலும் துணிஞ்சு
முன்னெடுத்துச் சென்றோமானால்
கண்டிப்பாக விலகிவிடலாம்
ஒவ்வொரு நல்லதாய் செய்யத் தொடங்கி
அடையாளமே இல்லாமல் சென்றுவிடுவேன்
நல்லது செய்வதால் மனசு சாந்தமடைகிறது
அவ்ளோ சந்தோஷமா இருக்கு
நான் யார் எனக்குப் பின்னால் யார்
என்ற அடையாளமே வேண்டாம்
நல்லவைகளை செய்திட்டு
போயிகிட்டே இருக்கணும்
அதனால் பலன் பெறுகிறவர்கள்
நம்மைப் பார்க்கிறார்களா என
திரும்பிப் பார்த்தோமேயானால்
நாம் தரம் தாழ்ந்திருப்போம்
அத்தனை நாளும் தெரியாது
எப்போவாவது வெளியில் போயிட்டு ராத்திரி
தாமதமாகி வந்தால்
நெடுஞ்சாலை ரோட்டோரம் ஒட்டியிருக்கும்
மளிகைக்கடைக்கு முன்னால் நின்றிருப்பார்
அதுவரை அங்கு வந்து மளிகை வாங்கிப்போகும்
பலரையும் ஏக்கத்துடன் பார்த்திருப்பார்
எல்லாம் அஸ்த்தமான பின்பு
குரல் தாழ கடனா கொஞ்சம் அரிசி கிடைக்குங்களா
என்று கேட்டிருப்பார்
கடைக்காரனின் செருக்கு, மனநிலைப் பொறுத்து
பதில் இருக்கும்
அவன் மகாராஜனாக வாழ்ந்துவிடவில்லைதான்
அதே கடைக்காரனும் இன்று
மகாராஜனாக வாழ்ந்துவிடவில்லைதான்
அவர் இறந்த கொஞ்சநாளிலேயே
தெய்வம் கடைக்காரரை அன்றே கொன்றுவிடத்
தொடங்கியது
ஆம் .. அவர்
கொரோனா சமயத்தில் மாரடைப்பால் இறந்துட்டார் .
அந்த மனிஷனுடைய வருடாந்திர நினைவுநாள் இன்று
என்ன வாழ்க்கை மயிருங்க
காத்துப்போற கணத்தை
உருவென வைத்துக் கொண்டு
என்ன வாழ்க்கை மயிருங்க
செத்தா நிழல்கூட மிஞ்சாது
நாமளே கேட்டுக்க வேண்டிதுதான்
ஏ நிழலே
நீ உன் அன்யோன்யத்தால்
என்னை ஆட்கொண்டிருக்கிறாய்
உனக்கு வெட்கமா ?
நீ என் ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறாயா ?
ஆனால் நான் உன் ஸ்பரிசத்தை
உணர்ந்திருக்கிறேன்
காமத்தால் அல்ல
வெளிச்சத்தினால்
ஏ நிழலே
நான் நிரந்தரமற்றவன்
நீ ஏன் என் பூத உடலுடன்
சிதையேறுகிறாய்
பைராகி