சிவந்த கன்னம்

யாரும் பாராமல்
கன்னி உந்தன் கன்னத்தில்
முத்தத்தை பரிசாக கொடுத்தேன்

நான் உனக்கு கொடுத்த
முத்தத்தை செவ்வானம்
ரகசியமாக
பார்த்து விட்டது போலும்....

எந்தன் முத்தத்தில்
உந்தன் முகம் சிவக்க
அந்த சிவப்பின் அழகினில்
செவ்வானமும் வெட்கம் கொண்டு
மறைந்து போனதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Dec-22, 6:03 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sivantha kannam
பார்வை : 986

மேலே