துள்ளிவந் தென்றன் துணையாக நிற்பாயோ - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
(1, 3, 5 சீர்களில் மோனை)
உள்ளத்தின் சோலையில் ஊஞ்சலாய் ஆடுதே
..உன்நினைவு;
வெள்ள மெனக்கூட்டும் வேட்கை மிகவும்
..விரிந்திடுதே!
கள்ள விழிப்பார்வை காந்தம்போல் என்னைக்
..கவர்ந்திடுதே;
துள்ளிவந் தென்றன் துணையாக நிற்பாயோ
..தூயவளே!
– வ.க.கன்னியப்பன்