ஏதுக்காம் இந்தப் புழுகுமே பெண்ணுக்கு போ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எதுகையில்லை மோனையில்லை ஏதுபொரு ளுந்தான்
இதமாக இங்கில்லை என்ன – விதமாய்
எழுதுகின்றாய் சொல்லிடுவாய் ஏதுக்காம் இந்தப்
புழுகுமே பெண்ணுக்கு போ!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-22, 5:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே