334 சேரிடத்தால் சிறப்பு இழிவு யாரையும் சேரும் - தீயரைச் சேராமை 3

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

மனிதர்கோள் மருவுநர் தமைக்கொண் டோதுவர்
புனிதமில் இடையின்கீழ் பொருவில் வாசத்தீங்
கனியையுந் தள்ளுவர் கயவர் தம்மைச்சேர்
இனியநற் குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே. 3

- தீயரைச் சேராமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மக்கள் தாங்கள் சேரும் மதிப்புடையவரின் மரியாதைக்கேற்ப அவர்கள் பெறும் மதிப்பையே பெறுவர்.

தூய்மையில்லாத இடத்தில் வீழ்ந்துவிட்டால் மணமுள்ள இனிய கனியையும் யாரும் கொள்ளாது தள்ளுவர்.

இவை போல், கீழோரைச் சேர்ந்த இனிய நற்குணமுடையவர்களும் இழிவு பெறுவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கோள் - மதிப்பு. மருவுநர் - கூடுவோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-23, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே