அப்பா_மகள்

காலை , கடிகாரத்தில் சின்ன முள் 9 ஐ தொட எட்டிக்கொண்டு இருக்க ,
அம்மா டாடா...., தம்பி டாடா ......, அக்கா ஈவினிங் வந்துருவேன் டா . நீ அழாம சமத்தா இருக்கணும் கார்வின் குட்டி ..,
என தன் 5 மாத தம்பிக்கு விடைகொடுத்து விட்டு அப்பாவின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் LKG படிக்கும் மகள் .
வண்டி வீதி முற்றம் தாண்டும் வரை திரும்பி திரும்பி டாடா சொல்லி முடித்தாள் என் மகள் .

அதுவரை புன்னகையோடு இருந்த அந்த முகம் சற்று வாட தொடங்கியது . சிறிது நேரம்கழித்து கரகரத்த குரலில் "அப்பா இன்னைக்கு ஸ்கூல் முடுஞ்சதுனா அப்பறம் டூ டேஸ் லீவு தானே "
பாவம் அவளுக்கு தெரியாது திங்கள்கிழமைக்கு பிறகு சனிக்கிழமை வராது என . நானும் அவளின் சந்தோஷத்திற்க்காக " ஆமா டா பட்டு" என்றேன் ...

பதில் சொல்லி முடித்ததும் பள்ளியை வந்தடைந்தோம்.
என் இரு சக்கர வாகனத்தில் இருந்து மகளை கீழே இறக்கி விட்டு முதுகில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் நிரம்பிய பை , இடது கையில் மதிய உணவு பை தனது வலது கையால் என் ஒரு கையை இருக்க பற்றிக்கொண்டாள் .
வார்த்தை தடுமாறிக்கொண்டு கண்களில் பெருகிய கண்ணீரை இமைகளால் அணையிட்டு தேம்பல்கள் விழுங்கி " அப்பா டாடா ... நீ இந்த படிக்கட்டில உக்காந்து இரு நான் சீக்கிரம் படிச்சிட்டு வந்துறேன் " என்று சொல்லிவிட்டு என்னை அங்கு உட்கார வைத்து விட்டு அவள் வகுப்பறை நுழையும் வரை திரும்பி திரும்பி பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் இதயம் இரும்பு குண்டாக மட்டுமே இருக்கும் . அவள் வகுப்பறை நுழைந்த அடுத்த நொடி காற்றாற்று வெள்ளமாய் என் கண்கள் ...
ஒவ்வொரு நாளும் என் மகன் மகளின் செயல்களில் என் அப்பாவின் அன்பை நான் சுவாசிக்கிறேன் .......
#அப்பா_ மகள்
#சிபூ

எழுதியவர் : சிபூ (6-Jan-23, 11:04 am)
சேர்த்தது : சிபூ
பார்வை : 46

மேலே