390 உயிரும் ஈந்து பிறர்க்கு உதவுவர் நல்லோர் - கைம்மாறு கருதா உதவி 8

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

மன்னிய கனிகாய் நீழல்
..மற்றெலா முதவிப் பின்னுந்
தன்னையு முதவா நின்ற
..தருவெனத் தங்கை யார்ந்த
பொன்னெலா முதவிப் பின்னும்
..பூட்சியா லுழைத்திட் டேனும்
இன்னுயி ருதவி யேனும்
..இடுக்கண்தீர்ப் பார்நல் லோரே. 8

- கைம்மாறு கருதா உதவி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மரம் நிலையாகத் தரக்கூடிய பழம், காய், நிழல் முதலிய எல்லாம் உதவி, அதன்பின் தன்னையே தரும்.

அது போல, நல்லோர்கள் தம் கைவசம் உள்ள பொருளெல்லாம் உதவிய பின்னும் தன் உடல் வருந்தி உழைத்தும், தனது இனிய உயிரைக் கொடுத்தும் பிறர் துன்பங்களைப் போக்குவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பூட்சி - உடல், இடுக்கண் - துன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-23, 6:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே