516 ஊன்உண் பழக்கத்தால் உண்பர் மக்களையும் - விலங்கினத்துக்கு இடர் செய்யாமை 3

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

கொடியவெவ் விலங்கை யெல்லாங்
..கோறலே முறையென் றாலும்
அடிமைபோல் நரர்க்கு ழைத்தீண்
..டயர்விலங் கினைமா சில்லாக்
குடிஞையை யடித்து தைத்துக்
..கொன்றுண்போர் சமயம் வாய்க்கில்
படியின்மக் களையு முண்பர்
..பழக்கம்போல் தீய துண்டோ. 3

- விலங்கினத்துக்கு இடர் செய்யாமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

உயிர்க்கொலை செய்யும் கொடு விலங்குகளைக் கொல்வதே முறை. ஆயின், அடிமைபோல் மக்களுக்கு உழைத்து இளைக்கும் ஆடு மாடு முதலிய விலங்கினங்களையும், குற்றமில்லாப் பறவைகளையும் அடித்துக் கொன்று உண்போர், வாய்ப்புக் கிடைத்தால் உலகத்தில் மக்களையும் கொன்று உண்பர். பழக்கம்போல் கொடியது உண்டோ?

அயர்தல் - இளைத்தல், குடிஞை - பறவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jan-23, 8:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே