நிழல்
யாரோ என்றோ
நட்டு வைத்து வளர்ந்த
மரத்தின் நிழலில் அமர்ந்து
ஓய்வுவெடுத்தவன்
சிந்தித்தான்
அசோக மன்னர்
மரம் வைத்தார்
குளம் வெட்டினார்
என்றோ படித்த
சரித்திர பாடம் நினைவில்
நிழல் போல் வந்தது
நாமும் ஒரு செடியை
நட்டு வைத்து மரம் வளர்ப்போம்
பிற்காலத்தில் அதன் நிழல்
யாருக்காவது பயன்படுமே
என்ற ஞானம் பிறந்தது
நிழல் கற்று தரும் பாடத்தை
நாம் எல்லோரும் சிந்திப்போம்
எதிர்கால சமுதாயத்திற்கு
ஓர் சரித்திரமாக இருப்போம்...!!
---கோவை சுபா