நீரின் முகங்கள்

குழந்தையாய் நீ
தாயாகிய மேகத்தின் மடியில் தவழ்கிறாய்!!
விளையாட்டுப் பிள்ளையாய் நீ
நண்பர்களுடன் வந்து செல்கிறாய்!!

அழிக்கும் கடவுளாய் நீ
கொடூரமாக எல்லாவற்றையும் அழிக்கிறாய்!!
ஆசானாய் நீ
மனிதாபிமானத்தையும், ஒற்றுமையும் கற்றுத் தருகிறாய்!!

இரக்கமில்லாதவனாய் நீ
வெள்ளமாக வந்து உன் கோபத்தைக் காட்டுகிறாய்!!
உதவியாளனாய் நீ
எங்களுக்கு என்றென்றும் உதவி செய்கிறாய்!!

நலம் விரும்பியாய் நீ
நாங்கள் ஆபத்தில் இருக்கும் போது காப்பற்றுகிறாய்!!
நாடோடியாய் நீ
உன் முடிவில்லாத பயணத்தினால் மகிழ்ச்சி அடைகிறாய்!!

பழிதீர்ப்பவனாய் நீ
உனக்கு கெடுதல் செய்தால் எங்களை பயமுறுத்துகிறாய்!!
பாதுகாவலனாய் நீ
நாங்கள் இயலாதவனாக இருக்கும்போது எங்களை காப்பற்றுகிறாய்!!

எழுதியவர் : (4-Jan-23, 1:23 pm)
சேர்த்தது : Yajnesh
Tanglish : neerin mugankal
பார்வை : 55

மேலே