அறநெறிச்சாரத்தால் அறிவு விளங்கும் – அறநெறிச்சாரம் 217
நேரிசை வெண்பா
ஆதியின் தொல்சீர் அறனெறிச் சாரத்தை
ஓதியுங் கேட்டும் உணர்ந்தவர்க்குச் - சோதி
பெருகிய உள்ளத்த ராய்வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது 217
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
முதற்கடவுளால் அருகனது பழமையான புகழை விளக்கும் இவ் அறநெறிச்சாரத்தினை கற்றும் கேட்டும் அறிந்தவர்கட்கு அவர் ஞானவொளி பெருகிய மனத்தவராய் இருவகை வினைகளினின்றும் நீங்கப் பெருவதால் கருதிய காரியங்கள் எளிதில் முடியும்!.
குறிப்பு:
உணர்ந்தவர், உள்ளத்தவராய், தீர்ந்து கூடல் எளிது என முடிக்கலுமாம்