அறநெறிச்சாரம் வீட்டினை யடைவிக்கும் – அறநெறிச்சாரம் 218

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு, ‘ந்’ எதுகை)

எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொ’ய்’ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து – மெ’ய்’ந்நூல்
அறநெறிச் சாரம் அறிந்தான்வீ டெய்தும்
திறநெறிச் சாரந் தெளிந்து 218

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

பொய்ந்நூல்களாகிய மற்றை நூல்களைக் கற்றும் கேட்டும் அவற்றின் பொருளையறிதலால் யாது பயன்? உண்மை நூலாகிய இவ் அறநெறிச்சாரத்தினைக் கற்றும் கேட்டும் அறிந்தவன் உறுதி பயக்கும் நெறியின் பயனை அறிந்து அந் நெறியில் நின்று வீடு பேற்றினை அடைவான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-23, 2:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே