அல்லி மலராக அழகிய நிலவொளியில்
சொல்லில் தமிழெடுத்து சொர்க்கத்தின் அமுதெடுத்து
எல்லையில்லா நீலவான அழகெடுத்து அந்திப் பொழுதில்
அல்லி மலராக அழகிய நிலவொளியில் உனை வடித்தானோ பிரமன்
சொல்லில் தமிழெடுத்து சொர்க்கத்தின் அமுதெடுத்து
அல்லிமலராக உனை வடித்தானோ பிரமன்
எல்லையில்லா நீலவான அழகின் கீழ் நிலவொளியில்