புன்னகை பூங்கொத்து உன் பூவிதழ்கள்
புன்னகை பூங்கொத்து உன் பூவிதழ்கள்
மின்னல் கீற்று உன்னிரு விழிகள்
சின்ன இடையில் பூங்கொடி தோற்கும்
என் கவிதையிலும் நீ இலக்கியமடி
புன்னகைப் பூங்கொத்தை பூவிதழ் தன்னில் ஏந்தி
சின்ன இடையை சித்திரம் போல அசைத்து
மின்னல் கீற்றை மெல்லிய விழிவழி வீசிடின்
என்கவிதையிலும் இலக்கியமடி நீ