நீல வண்ணம் கோலம் போடும் நீண்ட இருவிழிகள் அசைய
நீல வண்ணம் கோலம் போடும் நீண்ட இருவிழிகள் அசைய
நீல வண்ண வானம் போன்ற நீலப் பூங்குழல் காற்றிலாட
சோலை இளம்குளிர் போன்ற பார்வையால் காதல்வலை தன்னை வீசாதே
மேலைத் தென்றல் காதல் பாடல் பாடும் மாலை மயக்குக்காரி
நீலவண்ணம் கோலம் போட்டிடும் நீண்ட இருவிழிகள்
நீல வண்ணநிற வானம் போன்ற நீலப் பூங்குழல்
சோலை இளம்குளிர் போன்ற பார்வை
மேலைத் தென்றல் காதல் மாலை மயக்குக்காரி
நீலவண்ணம் கோலம் வரையும் இருவிழிகள்
நீலவண்ண வானத்தைப் போன்றநீல பூங்குழல்
சோலை இளம்குளிர் போன்றமென் மைப்பார்வை
மேலைக்கா தல்நீல மே
----இருவடிவில் காதலி