குடி மக்கள்

குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
ஔவை பாட்டியின் வாக்கு

"குடி" மக்கள் உயர உயர
அரசுக்கு வருமானம்
வளர்ச்சிப் பாதையில் நாடு
வீழ்ச்சிப் பாதையில்
"குடி" மகனின் வீடு.....!!

"குடி" பழக்கம்
குடும்பத்தை அழிக்கும்
அரசின் விளம்பரத்தை
"குடி" மக்கள் மதிப்பதில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Jan-23, 8:28 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kuti makkal
பார்வை : 276

மேலே