அவள்

தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் என் விரல்களில் மருதாணி வைத்து அழகு பார்த்தவள்..

அடி தாங்க மாட்டேன் என்று
அப்பாவின் கையெழுத்தை ரேங்க் கார்டில் போட்டுத் தந்தவள்...

அவளைப்போலவே தாவணி போட வேண்டும் என்று
அம்மாவிடம் ஒருமுறை அடம் பிடித்திருக்கிறேன்.

அவள் எத்தனை முறை சொல்லியும் கேட்காமல்
அவளுக்கான நாப்கின்களை வாங்க மறுத்திருக்கிறேன்.

தப்பை நான் செய்துவிட்டு வீட்டில் பலமுறை அவளை மாட்டி விட்டிருக்கிறேன்.

அவளது பாசத்தை உணர்ந்த சமயத்தில்
திருமணம் முடிந்து மாமாவோடு சென்று கொண்டிருந்தாள்.

அப்போது நான்
போர்க்களத்தில் தலையை இழந்துவிட்டு வாள் தூக்கி சிறு தூரம் நடக்கும் முண்டம்போல்

கண்ணை இழந்து விட்டு கண்ணீரை மட்டும் தூக்கிக் கொண்டு நடந்தேன்.

எழுதியவர் : திசை சங்கர் (26-Jan-23, 5:20 am)
சேர்த்தது : THISAI SANKAR
Tanglish : aval
பார்வை : 120

மேலே