மாலிய வான்சொற் கேளா மறமிலா இராவணன் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

மாலிய வான்சொற் கேளா
..மறமிலா இராவ ணன்றான்
கேலியுஞ் செய்யப் பெற்றான்
..கேட்பதற் காளும் இல்லை!
நூலிழைப் பெண்ணாள் தன்னை
..நோகவுஞ் செய்த லின்றி
பாலிய பெருமை யெல்லாம்
..பாங்குடன் காத்தான் இல்லை! 1

நுண்குணந் தானி ழந்தான்
..நோயுற்ற தன்மை போலே
பண்புமே தொலைத்தான் ஐயோ
..பாபமுஞ் செய்தான் ஐயா!
தண்கதிர் பெண்ணி னாளைத்
..தழுவிட எண்ணும் நீசன்
தண்மைச்சொற் கேட்டா னில்லை
..தளர்ந்தானே இராவ ணன்றான்! 2

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-23, 7:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே