காதல் என்பது என்ன
தெய்வீகக்காதல் என்று இன்று உள்ளதா என்ன?
இருபது வயதில் வந்தால்தான் காதலா?
அறுபதிலும்தொடரும் காதல் என்ன?
ஒருவன் ஒருத்தியை நேசித்தால் அது காதல்
அவன்(ள்) பலரை நேசித்தால் அது காதலாகுமா?
கணவன்-மனைவி இடையே உள்ள உறவு எல்லாமே காதலாகுமா?
திருமணம் ஆனபின் காதல் மறைந்திடுமா?
காமம் கொண்ட காதல் மட்டுமே காதலா?
காமம் இல்லாத அன்பு மட்டுமே இருப்பின் அது காதலாகாதா?
கேளிக்கைக்காக மட்டுமே நடக்கும் காதல் உண்மையிலே காதலா?
பணம் கொடுத்தும் பெற்றும் நடக்கும் உறவுகள் காதலாக இருக்க முடியாதா?
காதலித்துப் பழகியபின் வேறாரை மணப்பது எந்தக்காதல் கணக்கில் வரும்?
ஒருதலை, சிலநாள் காதல்களுக்கு ஏதேனும் கணக்கு வழக்கு உண்டோ?
இப்படியிருக்க காதலர்கள் தினம் என்று கொண்டாடுவோர் எத்தனை ஜோடிகள், தெருவெங்கும், ஊரெங்கும் நாடெங்கும் உலகெங்கும்?
காதலர்கள் தினத்தன்று மட்டும் இன்பத்திற்காக கொண்டாடும் இளம் ஜோடிகள் பலப்பல, முதிய ஜோடிகள் சில இன்று இல்லையா என்ன?
என்ன, என் கேள்விகளுக்கு பதிலே இல்லையே?
கேள்விக்கும் பதிலுக்கும் அவசியம் இல்லை, பொதுவாக உடல் மற்றும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே இன்று அவசிய தினம் என்று ஏதாவது ஒரு பாவப்பட்ட மனிதன் சொன்னால் அது தவறு. தவறுதானா?