297 சினங்கொள்வார் நெஞ்சுடன் சேரும் துன்பம் – சினம் 3
கலித்துறை
{மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காச்சீர் வரலாம்)
கண்சி வந்திட மெய்யெலா நடுங்கிடக் காலான்
மண்சி தைந்திட வுதைத்துநாக் கடித்திதழ் மடக்கி
எண்சி தைந்திடச் சினங்கொள்வீர் நும்மெயோ டிதயம்
புண்சு மந்தத லாற்பிறர்க் கென்குறை புகல்வீர். 3
- சினம், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“கண்கள் சிவக்க உடம்பெல்லாம் நடுங்க, காலால் மண் சிதற உதைத்து, நாக்கைப் பல்லால் கடித்து, உதட்டை மடக்கி, மனதில் கருத்து சிதையச் சினங் கொள்வீர்.
அச்சினத்தால் உமது உடலோடு நெஞ்சமும் வேத னைப்படுவீர். இவற்றையன்றிப் பிறர்க்கு என்ன குறையுண்டு சொல்லுங்கள்” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
எண் - கருத்து, இதயம் - நெஞ்சு.