அவள் ஒரு முடிவில்லா பயணம் -7

என்ன பிரச்சனை என அரவிந்த் கேட்க அதற்கு கதிர் எனக்குத் தெரிந்த பெண் பெயர் கார்த்திகா அவர்களுக்கு உன் கம்பெனியில் ஒரு வேலை வேண்டும் என கேட்கிறான் அரவிந்த் சரி வரச்சொல் கதிர் வேலை தருகிறேன் என சொல்லி விடுகிறான் என்ன என்ன எது என எதுவும் கேட்காமல் உடனே சரி என சொல்லி விட்டாய் அரவிந்த் ஆமாம் நீயும் நானும் கல்லூரியில் பழகியது நட்பு அப்படிப்பட்டது அதனால் உனக்கோசம் நான் எதையும் செய்வேன் நீ அவர்களை வரச்சொல் அவர்களுக்கு என் கம்பெனியில் வேலை போட்டு தருகிறேன் நாளை காலை என்னை வந்து பார்க்கச் சொல் சரி சொல்கிறேன் அரவிந்த் அந்தப் பெண் பெயர் கார்த்திகா சரியா அப்போ நான் கிளம்புறேன் அரவிந்த் என கதிர் சொல்கிறான் ஜூஸ் குடித்துவிட்டு போகலாம் என அரவிந்த் சொல்கிறான் இல்லை எனக்கு நேரம் ஆகிறது நான் இனி வீட்டுக்கு போக வேண்டும் அதனால் சரி ஓகே அப்ப நாளைக்கு அவர்களை வரச்சொல் அவர்களுக்கு நான் வேலை போட்டு தருகிறேன் என அரவிந்த் சொல்கிறான் மிகவும் நன்றி என கதிர் சொல்கிறான் பரவாயில்லை இது ஒரு பெரிய விஷயம் இல்லை கதிர் இதற்குப் போய் நீ நன்றி சொல்லத் தேவையையும் இல்லை என அரவிந்த் சொல்கிறான் சரி அப்போது நான் கிளம்புகிறேன் என கதிர் கிளம்பி வருகிறான் அவனுக்கு மிகவும் சந்தோஷம் கார்த்திகாவுக்கு வேலை கிடைத்துவிட்டது அவள் இடம் எப்படி சொல்வது அவள் வீடு தெரியாது அவள் எங்கிருக்கிறாள் எனவும் தெரியாது ஆனால் அவளை வேலைக்கு நாளைக்கு காலையில் வர சொல்லி இருக்கிறானே சரி நாம அவளை நாளை காலை பஸ் ஸ்டாண்டில் பார்க்கலாம் நமக்காக அவள் வந்து காத்திருக்கலாம் என வந்திருந்தால் இந்த முகவரியை கொடுத்து அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறான் உள்ளே போய் மேனேஜரிடம் உங்கள் கம்பெனி விசிட்டிங் கார்டு ஒன்று தாருங்கள் என கேட்கிறான் கதிர் சரிங்க சார் என மேனேஜர் விசிட்டிங் கார்டு எடுத்து கதிரிடம் கொடுக்கிறார் தேங்க்ஸ் வருகிறேன் என கதிர் கிளம்பி வருகிறான் சமைத்து வைத்துவிட்டு படிக்கலாம் என புத்தகங்களை பார்த்துக் கொண்டிருக்கிறாள் அப்போது அவளுக்கு திடீரென்று ஒரு செல்போன் வாங்கினால் என்ன என்று நினைக்கிறாள் ஆனால் இதை எப்படி நாம் அவரிடம் கேட்பது வாங்கித் தருவாரா என தெரியவில்லையே என யோசிக்கிறாய் கேட்டு தான் பார்க்கலாம் என நினைக்கிறாள் வந்ததும் என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்கள் என கேட்கிறாள் எப்போதும் போல்தான் அவன் எதுவும் பேசவில்லை நேராக போய் முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்து உட்கார்ந்து விடுகிறான் சரி பாரதி காபி குடிக்க கொண்டு வந்து தருகிறாள் அதை எடுத்துக் கொடுக்கிறான் அவன் குடிக்கும் போது பாரதி எனக்கு ஒரு செல்போன் வேண்டும் வாங்கித் தர முடியுமா என கேட்கிறாள் கதிர் எதுவும் பேசவில்லை எதற்கு இவள் செல்போன் கேட்கிறாள் சரி எதுக்காவது இருக்கும் என யோசிக்கிறான் யோசித்து விட்டு அவன் வேறு எதுவுமே சொல்லவில்லை எழுந்து உள்ளே சென்று விடுகிறான் இதுக்கும் எந்த பதிலும் இல்லையா என பாரதி நினைக்கிறாள் சரி என அவள் தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுகிறாள் மறுநாள் காலை சீக்கிரமாக கதிர் எழுந்து வேலைக்கு கிளம்புகிறான் பாரதி சமையல் இன்னும் செய்யவில்லை சமையல் ஆகிக்கொண்டிருக்கும் போது கதிர் கிளம்பி விடுகிறான் கொஞ்ச நேரம் லஞ்ச் எடுத்துக் கொண்டு போகலாம் என சொல்கிறாள் அவன் அதற்கு எதுவுமே சொல்லாமல் கிளம்பி வந்து விடுகிறான் என்ன ஆச்சு இவருக்கு எதனால இவர் இவ்வளவு சீக்கிரமா கிளம்புகிறார் சாப்பிடக்கூட இல்லையே என பாரதி நினைக்கிறாள் கதிர் சீக்கிரமாக பஸ் ஸ்டாண்ட் வந்து காத்திருக்கிறான் எப்படினாலும் ஏற்பாடு பண்றேன்னு சொல்லி இருக்கான் வேலை கிடைத்து விடுமா இல்லை என்ன சொல்லப் போகிறான் என தெரியவில்லையே என யோசித்துக் கொண்டு அவளும் சரி மத்தியானம் வர சொன்னான் நாம் போய் காத்திருக்கலாம் நமக்கு திடீரென ஏதாவது வேலை கிடைத்தால் சந்தோஷம்தான் என அவள் கிளம்பி வருகிறாள் ரவி வீட்டுக்குள் நுழைகிறான் என்ன எங்கேயோ கிளம்புற மாதிரி தெரிகிறது என கார்த்திகாவிடம் கேட்கிறான் ஆமாம் தினமும் ஊர் சுத்துற வேலையை நல்ல பொம்பள நீ ஒரு பொண்டாட்டியா வீட்ல இருந்து என்ன செய்யணும் என்ன பண்ணனும் எல்லாம் இல்ல நீ பாட்டுக்கு வருவது நீ பாட்டுக்கு போறது கேக்கவில்லை குழந்தையை பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பி வருகிறாள் வந்து அவள் எப்பொழுதும் காத்திருக்கும் இடத்தில் இருக்கிறாள் இவன் ஒரு இடத்தில் காத்திருக்கிறான் இப்படியே இருவரும் தனித்தனியாக ஒவ்வொரு இடத்தில் நின்று இருக்க சரி நாமே போய் பார்க்கலாம் எனக்கதிர் அப்படியே பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்று வருகிறான் அங்கு கார்த்திகா நிழல் கூடத்தில் அமர்ந்திருக்கிறாள் பார்த்து விட்டான் கார்த்திகாவை கார்த்திகா கார்த்திகா என கூப்பிடுகிறான் மத்தியானம் தானே வர சொன்னாய் இப்பயே வந்துட்ட என கார்த்திகா கேட்கிறாள் ஆமாம் உனக்கு வேலை கிடைத்து விட்டது சரியா கதிர் என என் பெயரை சொல் உனக்கு உடனே வேலை கிடைத்துவிடும் வர சொல்லி இருக்கிறார்கள் எல்லாம் உன் சர்டிபிகேட் கொண்டு வந்து விட்டாயா என கேட்கிறான் கதிர் சரி அப்போ உடனே கிளம்பி போய் இந்த கம்பெனி எம்டிஐ பார் பெயர் அரவிந்த் என கதிர் சொல்கிறான் ரொம்ப தேங்க்ஸ் கதிர் இவ்வளவு பெரிய உதவி நீ எனக்கு செஞ்சிருக்க இதனை எப்பயும் மறக்க மாட்டேன் என கார்த்திகா சொல்கிறாள் பரவாயில்லை இது அவ்வளவு பெரிய உதவி என எனக்கு எதுவும் தெரியவில்லை நீ இந்த வேலையில் போய் சேர்ந்து உன் திறமையை காட்டு கண்டிப்பா கதிர் நான் வருகிறேன் எனக் கிளம்புகிறாள் கார்த்திகா வாழ்த்துக்கள் என சொல்லி அனுப்பி வைக்கிறான் கதிர் இப்பொழுது கதிருக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது கார்த்திகாவுக்கு வேலை கிடைத்தது இனி எந்த பிரச்சனையும் இல்லை என ஆனாலும் அவன் மனதில் ஒரு சிறு சிந்தனை அவளின் கணவர் என்ன ஆனான் அவனுக்கும் இவளுக்கும் என்ன பிரச்சனை என யோசிக்கிறான் உடனே பாரதி நினைவு வருகிறது இதுவரை அவள் நம்மிடம் எதுவும் கேட்கவில்லை ஒன்றே ஒன்றுதான் ஆசைப்பட்டு கேட்டால் அதுவும் ஒரு போன் வேண்டும் என அதற்கு கூட சரி என நம் பதில் சொல்லவில்லை கார்த்திகாவை தேடி போய் உனக்கு உதவி செய்கிறேன் என சொல்கிறோம் நம்மை நம்பி வந்த பாரதியை கண்டுக்கவே இல்லை என்றால் கண்டு கொள்வதே இல்லை என்றால் தவறல்லவா? அவள் கேட்டதை உடனே அவருக்கு வாங்கி தர வேண்டும் என கதிர் மனம் சொல்கிறது சரி அப்ப இன்று மாலை ஒரு செல்போன் கடைக்கு போய் நல்ல செல்போனாக ஒன்று வாங்கிக் கொண்டு போய் பாரதியிடம் கொடுக்க வேண்டும் என கதிர் நினைக்கிறான் கார்த்திகா கம்பெனிக்கு வருகிறாள் வெளியில் இருக்கும் மேனேஜரை பார்க்கிறாள் சார் வணக்கம் என் பெயர் கார்த்திகா நான் கதிரோட ஃப்ரெண்ட் கதிர் தான் போய் அரவிந்த் சாரை பார்க்க சொன்னாரு என கார்த்திகா சொல்கிறார் சரி மேடம் ஒரு நிமிடம் காத்திருங்கள் நான் உள்ளே சென்று அரவிந்த் சாரிடம் கேட்டுவிட்டு வருகிறேன் என மேனேஜர் உள்ளே வருகிறார் சார் உங்களிடம் உங்களை பார்க்க கார்த்திகை எனும் பெண் வந்திருக்கிறார்கள் கதிர் சார் அனுப்பி வைத்தார்கள் என சொல்கிறாள் சரி வரச்சொல் மேனேஜர் என அரவிந்த் சொல்கிறான் வெளியில் வந்த மேனேஜர் மேடம் நீங்க உள்ள போங்க என சொல்ல கார்த்திகா உள்ளே வருகிறாள் வணக்கம் சார் என் பெயர் கார்த்திகா என அவள் சொல்ல சரி நீங்க அப்பாயின்மென்ட் போங்க உங்க சீட் எது என்று மேனேஜர் சொல்லுவாரு போய் உங்க வேலைய பாருங்க என ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறான் அரவிந்த் சார் நீங்க என்னோட வேற எந்த இதையும் கேட்கவே இல்லையே தேவையில்லை கதிர் சொன்னா அது சரியாகத்தான் இருக்கும் அதனால் அதற்குப் பின் எந்த இதுவும் தேவையில்லை என சொல்லி விடுகிறான் அரவிந்த் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள் கார்த்திகா வேலை கிடைத்துவிட்டது இனி கஷ்டமில்லை ரவியே சரி இல்லை என்றாலும் சரி ரவி வேண்டாம் என விட்டுவிட்டாலும் சரி நாம் இனி வாழலாம் என நினைக்கிறாள் அவ்வளவு மரியாதை கொடு அந்த கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது அதனாலேயே அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது மாலை நேரம் ஆகிவிட்டது கதிர் இனி கார்த்திகாவை நாம் பார்க்க கூடாது அவளுக்கும் நமக்கும் இனி எந்த பிரச்சனையும் வேண்டாம் அவளால் நம் வாழ்க்கைக்குள் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என நினைக்கிறான் அதேபோல்தான் கார்த்திகாவும் நினைக்கிறாள் தொடர்ந்து நாம் கதிரை பார்க்கவே கூடாது இனி பார்த்த வரை போதும் நம்மால் கதிரின் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என கார்த்திகாவும் நினைக்கிறாள் அதனால் இருவரும் தனித்தனியாக செல்ல நேரத்தை மாற்றிக் கொள்கின்றனர் வேலை முடிந்ததும் ஒரு பெரிய செல்போன் கடைக்கு வருகிறான் வந்து பார்க்கிறான் புதுப்புது மாடலான செல்போன்கள் இருக்கிறது பார்த்துவிட்டு இந்த போன் எவ்வளவு என கேட்கிறான் கடைக்காரரிடம் அதற்கு அவர் 29 ஆயிரம் அதாவது 30,000 சார் என சொல்கிறான் சரி இந்த போன் ஓகே இதை பேக் பண்ணுங்க எனக்கதிர் சொல்கிறான் உடனே கடைக்காரர் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு பில் போடுகிறார் பணத்தை எடுத்து கதிர் கொடுத்து விட்டு செல்போனை வாங்கிக் கொண்டு நேராக வீட்டுக்கு வருகிறான் பாரதி படித்துக் கொண்டிருக்கிறாள் இவன் வருவதை பார்த்துவிட்டு புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு நேராக சமையலறைக்குச் சென்று அவன் குடிப்பதற்காக காபி போடுகிறாள் இவன் வந்தவுடனே பார்க்கிறான் பார்த்துவிட்டு அவள் படித்துக் கொண்டு இருக்கும் இடத்தில் புத்தகத்தை வைத்திருக்கிறாள் அந்தப் புத்தகத்தை எடுத்து வாங்கிக் கொண்டு வந்து செல்போனை அடியில் வைத்து அதன் மேல் புத்தகத்தை வைத்து விடுகிறான் கதிர் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன் என கூட சொல்லவில்லை ஆனால் அவன் மனதிலும் பாரதியின் மீது லேசாக காதல் வருகிறது அது மலருமா அல்லது மறையுமா என தெரியவில்லை முகம் கை கால் கழுவ சென்று விடுகிறான் பாரதி காபி போட்டுக் கொண்டு வந்து டேபிள் மீது வைக்கிறாள் வைத்துவிட்டு போய் படிக்கலாம் என போகிறாள் இவன் வந்து காபியை எடுத்துக் கொண்டு நேராக ரூமுக்கு போகிறான் அவள் என்ன செய்கிறாள் என பார்க்க ஜன்னல் ஓரத்தில் நிற்கிறான் பாரதி வந்து புத்தகத்தை எடுத்து படிக்கிறாள் படிக்கும்போது இப்படி இன்னொரு புத்தகம் அடியில் பேனா இருக்கிறது அதை எடுக்க அந்த புத்தகம் இழுக்கிறாள் பார்த்தால் ஒரு புதிய செல்போன் டப்பா இருக்கிறது உள்ளே பார்த்தால் புதிய செல்போன் இருக்கிறது பார்த்ததும் பாரதிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை கேட்டதும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டார் இதுவரை செல்போன் என்றால் என்ன என்று தெரியாது அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரியாது ஆனால் கேட்டதும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டாரே இவளைப் போல் ஒரு நல்லவன் எவனும் இல்லை என நினைக்கிறாள் செல்போனை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள் வருவதைப் பார்த்த கதிர் கட்டிலில் அமர்ந்து விடுகிறான் வந்து நிற்கும் பாரதி ரொம்ப சந்தோஷமா இருக்குங்க நீங்க எனக்கு போன் வாங்கி கொடுத்தது என்னால மறக்கவே முடியாது என் வாழ்க்கையில எங்க அப்பா பெரிய பண்ணையாறு தான் ஆனாலும் நான் இதுவரைக்கும் அவர்கிட்ட எதுவும் கேட்டதில்லை அப்படி கேட்டால் அவர் எதுவும் எனக்கு உடனே வாங்கித் தந்தது இல்லை ஆனா உங்க கிட்ட கேட்ட உடனே நீங்க வாங்கி தரணும் சொல்ல இல்லன்னு சொல்லல ஆனா வாங்கிக் கொண்டு வந்து எனக்கு இவ்வளவு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்ததுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலையே இப்ப ஒன்னு சொல்லுனும் நான் தோணுது அது சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை ஆனாலும் சொல்கிறேன் ஐ லவ் யூ என பாரதி சொல்கிறார் அதைக் கேட்டதும் கதிருக்கு ஒரு மாதிரியாகிறது அவனுக்கும் அது பிடிக்கிறது அவனும் அவளை காதலிக்கிறான் கூடிய சீக்கிரம் உன்னிடம் நான் பேசுவேன் பாரதி. நீயும் நானும் எவ்வளவு சந்தோஷமாக வாழ போகிறோம் எனப் பார் என கதிர் சொல்கிறான் அதாவது மனதுக்குள் சொல்கிறான் சொல்லிவிட்டு பாரதி சந்தோஷமாகவே செல்போனை எடுத்துக் கொண்டு வருகிறாள் வந்து பக்கத்தில் வைத்துவிட்டு இதை எப்படி யூஸ் பண்ணுவது என்ன என்று தெரியவில்லையே என யோசிக்கும் போது வாங்கிக் கொண்டு வந்த செல்போன் டப்பாவுக்குள் புத்தகங்கள் சில இருக்கிறது அதை படித்துவிட்டு இப்படித்தான் இந்த செல்போனை பயன்படுத்த வேண்டும் என புரிந்து கொள்கிறாள் வீட்டுக்கு வந்த கார்த்திகாவை பார்த்து என்ன என்னைக்காச்சும் வேலை கிடைச்சுச்சா அதற்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை நான் கேட்கிறேன் அதுக்கு பதில் சொல்லுவியா மாட்டியா என ரவி கேட்கிறான் இப்போ உங்களுக்கு என்ன நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறிர் கிடைத்தது என சொல்ல வேண்டுமா இல்லை என சொல்ல வேண்டுமா எது உண்மையோ அதை சொல்றி என ரவி திட்டுகிறான் உங்ககிட்ட சொல்லனும்னு எனக்கு சொல்ல விருப்பம் இல்லை என கார்த்திகா சொல்லிவிடுகிறாள் அதைக் கேட்டதும் ரவிக்கு கோவம் வருகிறது உனக்கு எவ்வளவு தைரியம் என்ன ஒரு ஆம்பளையா நீ கொஞ்சம் கூட மதிக்கிறதே இல்ல உனக்கு அவ்வளவு திமிருடி என ரவி திட்டு கிரான் ஆமாம் எனக்கு திமிர் தான் இப்ப என்ன நான் உண்மையா இருக்கிற அதனால எனக்கு திமிர் இருக்கும் தான் சரியா நான் உங்களுக்கு துரோகம் செய்யல நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு என்னோட வாழ பிடிக்காமல் நான் என்ன செஞ்சாலும் தப்பு தப்புன்னு சொல்லிட்டு இருக்கீங்க அதை நான் எதுவும் சொல்ல முடியாது எதுவும் பண்ணவும் முடியாது உங்களுக்கு புடிச்சா என் கூட வாழுங்க இல்லனா என்ன விட்ருங்க ஓ அப்ப நான் விட்டுட்டா நீ அவன் கூட ஓடிப் போயிடுவேன் கரெக்டா அடச்சே இவ்வளவு கேவலமான கேரக்டரா நீங்க உங்கள போய் நான் கல்யாணம் பண்ண பாரு இப்ப அதை நினைச்சு ரொம்ப கேவலமா நினைக்கிறேன் எனக்கு கார்த்திகா சொல்கிறாள் அப்ப இல்லன்னா மட்டும் உனக்கு மைசூர் மகாராஜா தான் வரப் போறான் போடி போ தினமும் போய் ஊர் சுத்திட்டு வர இர்ரி உன்னால சும்மா விடமாட்டேன் என திட்டி விட்டு திரும்ப குடிக்க போகிறான் ரவி போய் தொலைங்க திரும்ப வீட்டுக்கு வந்துராதீங்க நானும் குழந்தையும் நிம்மதியா இருக்கும் எவனுக்கு பிறந்ததுன்னே தெரியல ஏன்னா இன்சியல் போட்டுகிட்ட என அவன் தானாக அவன் பேசிக்கொண்டு உளறிக்கொண்டு போகிறான் அதை பார்த்த கார்த்திகா குழந்தையை தூக்கி அம்மாக்கு வேலை கிடைத்துவிட்டது இனி உனக்கு எந்த கவலையும் கிடையாது எது வேணும்னாலும் அம்மா வாங்கி கொடுப்ப சரியா குட்டி என குழந்தையை கொஞ்சுகிறாள் கொஞ்சி விட்டு வாங்கிக் கொண்டு வந்த இனிப்பை குழந்தைக்கு ஊட்டி விடுகிறாள் இதை கொடுத்து சந்தோஷப்படுற அளவுக்கு எனக்கு யாரும் இல்லை ஆனாலும் நம்ம ரெண்டு பேர் சந்தோஷமா இருக்கலாம் என்று தான் வாங்கிட்டு வந்தேன் என குழந்தை இடம் சொல்கிறாள் அவள் சொல்வதைக் கேட்டு அந்த குழந்தை சிரிக்கிறது

தொடரும்...

எழுதியவர் : தாரா (18-Feb-23, 12:21 am)
சேர்த்தது : Thara
பார்வை : 265

மேலே