கலியுக கதை..!!!

காணாத சுடரைக்
கண்டு யாக்கை
வெந்து தணிக்கிறது
கலியுகத்தில்..!!!

ஆதிகால மனிதனும்
அம்சமாய் வாழ்ந்து
விட்டுப் போக..!!!

நாகரிகம் என்னும்
பெயரில் நாற்றம் எடுக்கிறது கலிகாலம்..!!!

சுயமரியாதை என
நினைத்து இருக்கும்
சொந்தங்களை எல்லாம்
தள்ளி வைக்கிறது..!!!

தவறு செய்து
செய்து திருந்தியவன்
இப்போது தவறுக்குள்ளே
முழுகி கிடக்கிறான்..!!!

எத எடுத்தாலும்
ஜாதி மதம்
இனம் என
தனித்தனியாக பிரிக்கலாம்
என முடிவெடுத்து விட்டான்..!!!

கடவுளே இப்படி
வாழ்வதற்கு
வாழாமலே இருக்கலாம்..!!!

போதும் நாகரிகங்களை
மறந்து இப்படி
நடு வீதியிலும்
என்ன சொல்ல..!!!

கலியுகங்கள் கைவிட்டது
இனி எவரையும்
திருத்திக் கொள்ள
முடியாது என தன்னம்பிககையை..!!!

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (19-Feb-23, 12:05 pm)
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே