கானமும் கருத்தும்

A. பீம்சிங் அவர்கள் இயக்கி, சிவாஜி, தேவிகா இணைந்து நடித்து 1962ல் வெளி வந்த
பந்தபாசம் திரைப்படத்தில் வரும்

நித்தம் நித்தம் மாறுவது எத்தனயோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ

என்று வெண்கல குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில்
கவிஞர் மாயவநாதன் எழுதிய பாடல் வரிகளை கேட்கும் போது
கல் நெஞ்சம் கொண்டவரும் சற்றே கலங்கி விடுவார்கள்.

காதலுக்கும், குடும்ப பாசத்திற்கும் இடையே நடக்கும் ஒரு மனிதனின்
மன போராட்டத்தை கவிஞர் மிகவும் ஆழமாக பாடல்வரிகளில்
அழகாக படைத்துள்ளார்.

வெண்கல குரலோனின்
பின்னணியில், மெல்லிசை மன்னர்களின் மென்மையான இசையில் சிம்ம குரலோன் சிவாஜியின் அமைதியான
முக பாவத்துடன் கூடிய நடிப்பு மிகவும் அருமை.

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது
குடும்ப நிலைமை
எதிரில் வந்து நின்று
கடமை என்றது

காதலுக்கும் கடமைக்கும் நடுவில் வாலிப உள்ளத்தின் போராட்டத்தை கவிஞர் அருமையாக சொல்லிவிட்டு
முடிவில் காதல் கொண்ட இளைஞன் குடும்பத்தின் நலனுக்காக, தனது காதலை தியாகம் செய்துவிட்டு, குடும்பத்தின் பாரத்தை தன் தோள்களில் சுமந்துக் கொள்கிறான் என்று சொல்லிவிட்டு
மனித வாழ்க்கை என்பது
மேடு பள்ளம் நிறைந்ததுதான்
என்று நிறைவு செய்கிறார் கவிஞர்.

மேடு பள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கை என்பது என்ற வரிகளை
சீர்காழி அய்யா தனது வெண்கல குரலை உடைத்து தழு தழுக்க பாடும் போது, கேட்போர் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் நிச்சயம் வந்துவிடும். மிகவும் அருமையான பாடல்.
பாடலை கேட்டு விட்டு உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
மிக்க நன்றி...
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Feb-23, 7:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே