நகர பேருந்து
நகர பேருந்து
பெயர் என்னவோ
நகர பேருந்து
நகரத்திற்குள்ளாக
நகர்ந்துதான் செல்கிறது
என்றாலும்
நிற்கா பேருந்து
என்று அழைத்தாலும்
தகும்
அதுவும்
நிறுத்தம் நிறுத்தா
பேருந்து
என்பதுதான் பொருத்தம்
காலத்தின் ஓட்டத்தை
கை கெடிகாரத்தில்
பார்த்தபடி
கைவிரல் நகத்தை கடித்து
பேருந்தை எதிர்பார்த்து
சிலர் பலர்
பாவம் அவர்களுக்கு
பணி நேரம்
அங்கு இருக்கவேண்டும்
வட்டு பிடித்த
கையும்
கனவுகள் கொண்ட
முகமாய் ஓட்டுனரும்
வாயில் வைத்த
விசிலும்
பயண சீட்டை
கிழித்து கிழித்து
கொடுத்து ஓய்ந்த
கையும்
இருவரின் மன நிலையும்
காலை எரிச்சலில்
காந்தலாய் எரிய
காத்து நிற்பவர்களை
கண்டால் என்ன
குதுகலமோ?
வாயில் வைத்த
விசிலை ஊதி
தடுப்பு தட்டை
ஏறி மிதித்து
காத தூரம்
தள்ளி போய்
நிற்கும் பேருந்து
பாவம் ஓடி வந்து
ஏறும்
காத்து நின்ற
கூட்டம்
மனதுக்குள் இவர்களை
வசைபாடினாலும்
அப்பாடி என நிம்மதி
பெருமூச்சு விட்டு
சாந்தபடுத்தி
கொள்ளத்தான் செய்கிறார்கள்
என்ன செய்வது?
வாழ்க்கை ஓட
வேண்டுமே