ஊடல்..
அடி என்னவளே..
உன் ஓர பார்வையில்
ஒய்யாரமாய் என்னை
இழுத்து அணைத்துக்கொள்..
என் தலைக்கோதி
நெற்றி முழுவதும்
முத்தங்களாக வை..
ஆறடி தேகமும்
அசந்து போகும்
அளவிற்கு
அமர்க்களம் செய்..
வேர்வை சுரக்காத
பூ இதழை வைத்து
உடம்பு முழுக்க
வேர்க்க வை..
செங்குருதியின்
நதியின பெருக்கெடுக்க
செல்லமாய்
ஒரு கடிகடி..
இருவரும்
இன்ப கடலில்
மூழ்கிட இருளும்
இங்கு சத்தம் விடும்..
இரவு முழுவதும்
உறங்காமல் விழிகளும்
விரதம் கொள்ளுதடி..
பாலமேடு என
பார்க்காமல்
சாய்ந்து கிடக்கும்
என்னை முழுவதும்
மேய்ந்து கொள்ளடி..
பசியே இங்கு
ருசியை மாறிவிட
செய்வோம்
இருவரும் ஊடல்..