சாந்தி நிலவ வேண்டும்

சாந்தி நிலவ வேண்டும்!

குண்டுகள் விழும் சத்தம்
காதைத் துளைக்கிறது
வருகிறார் துப்பாக்கியேந்தி பெண்டிரைத் தேடி
போதைக் கொண்ட படையினர்;

வயது அவருக்கு ஒரு பொருட்டல்ல
மழலைகளும் விரைவே அவருக்கு இரை
அழித்திடுவோம் இனத்தையேயென
தாண்டவம் ஆடுகின்றார்;

பிணம் தின்னும் கழுகுகள்
பசியற்றும் புசித்துண்டு
பெருத்து, பறக்க மறந்து கூரையிலமர்ந்த்து̀
கொக்கறித்து எக்காளமிடுகின்றன;

குதறியழித்த சடலங்களுக்காக
சாக்கடையில் வாழுமந்த
பெருச்சாளிகளும் கழுகுகளுடன்
உறவு கொண்டுவிட்டன;

ஒளித்தரும் கதிரவன் உதிப்பான் மீண்டும்
மறைக்கும் மேகங்கள் விலகும் மீண்டும்
ஒளியைக்கண்டு ஓடியொளியும்
பெருச்சாளிகளும் கழுகுகினங்களும்!

கல்கத்தா சம்பத் குமார்
(கவிஞர் காசி ஆனந்தன் சமீபத்தில் கல்கத்தா வந்து இலங்கை நிலவரம் பற்றி சொற்பொழிவாற்றியதன் எதிரொலி இந்த கவிதை!)

எழுதியவர் : கல்கத்தா சம்பத் குமார் (21-Feb-23, 12:31 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 36

மேலே