160 அயலான் அன்பு உரையால் அழியும் கற்பு – பரத்தமை 4
கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
மனமகிழ் வா(ய்)அயல் மைந்தர் தம்மொடுந்
தினமுரை யாடிடுந் தெரிவை கற்பது
புனலுறு முப்பினைப் போலு மென்மெழுகு
அனலுற லென்னவும் அழிவ(து) உண்மையே. 4
– பரத்தமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”அயல் ஆண்களுடன் மனமகிழ்ந்து ஒரு பெண் நாள்தோறும் உரையாடுவாளானால், அவள் கற்பானது தண்ணீரைச் சார்ந்த உப்பைப் போலவும், மென்மையான மெழுகு தீயில் பட்டது போலவும் அழியும் என்பது உண்மையே” என்கிறார் இப்பாடலாசிரியர்.
மைந்தர் – ஆண்கள், தெரிவை – இளம்பெண்,
புனல் - தண்ணீர். அனல் - தீ.