சர்க்கரைப் பழமாம் வாசன்
நேரிசை வெண்பா
எழுத்தில் இலக்கணம் இல்லை யெனலாம்
எழுத்தும் நடையும் வியப்பே -- பழுத்த
பழமானீர் யித்தளத்தில் வாசனாரே வேண்டும்
எழுத்திலே உம்கைவண்ணம் இன்று
இந்தத் தளத்தில் சக்கரை வாசனார் சொல்லாடலையும் எடுத்தாளும் கைவண்ணமும் உண்மையில் யாராலும் விஞ்சமுடியாது. அவருடைய கருத்துக்கள் இலக்கணம்
மீறி இருப்பினும் இலக்கியம் என்று பார்க்க ஆயிரம் மடங்கு மேலானது. அவருடைய
இலக்கிய அறிவு இத்தளத்தில் யாருக்கும் இல்லை என்று நான் புரிந்துள்ளேன்.. அவருடைய கருத்துக்கும் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்.