கவிஇளங்கோ காதலில் அதிகாரம் செய்தான்

கவிகம்பன் காதலை காவியம் ஆக்கினான்
கவிஇளங்கோ காதலில் அதிகாரம் செய்தான்
கவிகாளி தாசன்கா தலைநாடகம் ஆக்கினான்
கவியோகி திருமூலன் காவிக்குப் பாவடித்தான்

கவிதையின் சில குறிப்புகள் :--
கம்பன் காதல் காவியம் இராமாயணம்

இளங்கோ முக்கோண காதல் காப்பியம் சிலப்பதிகாரம்

காளிதாசன் செய்த காதல் நாடகம் சாகுந்தலம் மாளவிகாக்நிமித்ரம்
சாகுந்தலத்தை மறைமலை அடிகள் தமிழில் தந்திருக்கிறார்

திருமூலர் பெரிய சிவயோகி அவரது தவப்பாடல்கள் ஞானப் புத்தகமல்ல
ஞானப் பொக்கிஷம்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-23, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே