மன்னிப்பாயோ
விழியின் வழியே
மழையை பொழிய/
வழியும் விழிநீரை
விரல்களால் துடைத்து/
வறண்ட நிலத்தை
பசுமையாக்கிட/
முயல்கிறேன் முகில்களோடு/
வறண்டதே நிலங்கள் வளர்ச்சியாலே/
துவண்டதோ இங்கே விவசாயமே/
வளர்ச்சியால் எழுச்சிகள்
கண்ட போதுமே/
வாடுதே இங்கே குடும்பங்கள் பல/
வயிற்றுப் பசியாலே/
மழையை பொழிய
மேகத்துக்கு தூதுவிடுகிறேன்/
வெட்டிய மரங்களை
வளர் என்கிறது/
கட்டிய கட்டிடங்களின் உச்சத்தால்/
உச்சத்திலே இருக்கிறதே வெப்பம்/
பஞ்சத்திலோ நீர்நிலைகள் இருக்க/
வெஞ்சத்திலே தவிக்கின்றன நெஞ்சங்கள்/
வெண் முகிலே!
கருக்கொள்வது எப்போதோ?/
உன் பிரசவத்திற்காய்/
தவம் கிடக்கின்றன இங்கே/
பல நெஞ்சங்கள்/
மன்னித்து மழை தாருவாயா?/
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா