அனாதை இவன்..//

ஒரு துயரம்
வந்தால் வருகின்ற
கண்ணீர் துளியை
துடைப்பதற்கும்
தடுப்பதற்கும்
நாதியற்ற நான்..//

எப்பொழுதும் நடுத்தெருவில்
நிற்கிறேன் வலிகளை
கண்டு கண்டு
மறுத்து போன
எனக்கு கண்ணீர்
துளிகளும் பெரிதாய்
தெரிவதில்லை..//

புன்னகையோடு
சிறு நாழிகை
வலிகளோடு பல
காலங்கள் என
மாறி மாறி எந்தன்
வாழ்வில் மிகவும்
பிரகாசமாய் ஒலிக்கும்..//

எங்கோ ஒருவர்
என்னை ஏற்க
நினைத்தால்
அன்பை
காட்டி அடிபணிவதோடு
அடிமையை போகும்
ஏற்கும் மனது..//

எழுதியவர் : (1-Apr-23, 7:01 am)
பார்வை : 30

மேலே